ஆளுமை அறிமுகம் - 02
இலங்கையிலுள்ள இஸ்லாமிய அறிஞர்களுள் தனக்கென தனியிடம் பிடித்துள்ள உஸ்தாத் அஷ்-ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் (இது உஸ்தாத் அஷ்-ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களது 15 ஆவது நூலான; "100 வாழ்க்கைப் பாடங்கள்" இன்று (06.08.2025) BMICH இல் வெளியீடு செய்யப்படுவதை முன்னிட்டு இன்றைய தினகரன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட சிறப்புக் கட்டுரை) 📖 100 வாழ்க்கைப் பாடங்கள் ✍️ உஸ்தாத் அஷ்-ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் உஸ்தாத் அஷ்-ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் இலங்கை மண் ஈன்றெடுத்த இஸ்லாமிய அறிஞரும் கல்வியியலாளரும் ஆவார். இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணியில் இவர் முக்கிய பங்காற்றி வருகிறார். இவர் மக்களை இலகுவில் கவர்ந்திழுக்கும் ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர். அல்ஹம்துலில்லாஹ் அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் 1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் திகதி இலங்கையின் வடமேல் மாகாணத்தில் குருணாகலை நகருக்கு அண்மையில் உள்ள 'தோரயாய' எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை அப்துல் கரீம், தாயார் கமறுன் நிஹார். மூன்று சகோதரர்களையும் ஒரு சகோதரியையும் கொண்ட இவர் குடும்பத்தில் மூன்றாமவர். 1988ம் ...