Posts

Showing posts from April, 2026

ஆளுமை அறிமுகம் - 04

Image
கலாநிதி அஷ்ஷெய்க் அரபாத் கரீம் (நளீமி)   Dr Ash Sheikh  Arafath Careem  (Naleemi) பேருவளை சீனன்கோட்டையில் பிரபல மாணிக்க வியாபாரியாகத் திகழ்ந்த அப்துல் கரீம் ஹாஜியார் அவர்களது மகன் அல்ஹாஜ் ஏ.ஸீ.எம். ஜிப்ரி, சித்தி நழீரா தம்பதிகளுக்கு மூத்த மகனாக கலாநிதி எம்.ஜே.எம். அரபாத் கரீம் (நளீமி) அவர்கள் 1982 செப்டம்பர் 28 ஆம் திகதி புனித மிகு அரபா தினத்தில் பிறந்தார். சிறுபிராயம் முதலே சிறந்த மார்க்க சூழலில் வளர்க்கப்பட்ட கலாநிதி அவர்கள், தனது ஆரம்ப அடிப்படை மார்க்கக் கல்வியை “பிடவல அல்மிர் அதுஷ் ஷாதுலிய்யா ஸாவியா” பள்ளிக்கூடத்தில் பெற்றுக் கொண்டார். அங்கு அவருக்குக் கிடைத்த கல்வியும் பயிற்சியும் அவரது பிற்கால முன்னேற்றத்தில் பாரிய செல்வாக்குச் செலுத்தியதாக அவர் நன்றியோடு நினைவுகூர்வார். கலாநிதி அரபாத் கரீம் தனது பாடசாலைக் கல்வியை பேருவளை அல்ஹுமைஸரா மத்திய கல்லூரியில் தொடர்ந்தார். சிறு வயதிலேயே எழுத்து, வாசிப்பு, பேச்சு ஆகிய துறைகளில் ஆர்வம் காட்டும் மாணவராக இருந்தார். பாடசாலை மட்டத்திலும் ஊரிலும் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி முதல் நிலை வெற்றிகளைப் பெற்றுள்ளார். 1998 ஆ...