Posts

Showing posts from February, 2026

Paper Article - 02

Image
ரமழான் சிந்தனை - 02 நோன்பின் உண்மையான நோக்கம் 2026/02/20 Thinakaran நோன்பு என்பது வெறும் பசியையும் தாகத்தையும் தாங்கும் உடலுக்கான பயிற்சி அல்ல. அது மனிதனின் உள்ளத்தை சீரமைக்கும் ஓர் ஆன்மீகப் பயிற்சி. அல்லாஹ் குர்ஆனில்  கூறுகின்றான்: “ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு விதிக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டுள்ளது; நீங்கள் தக்வா  உடையவர்களாக மாறுவதற்கு” (அல்-பகரா: 183). இந்த  வசனம் நோன்பின் மைய நோக்கத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. தக்வா என்பது இறைவனை உணர்ந்து வாழும்  உணர்வாகும். மனிதன் யாரும் காணாத தருணத்திலும்  பாவங்களை தவிர்த்து வாழும் மனப்பக்குவமாகும். நோன்பு இந்த உளகட்டுப்பாட்டை உருவாக்குகிறது. உணவு முன் இருக்கும்போதும் அதைத் தவிர்ந்து கொள்வது, தாகம் இருந்தாலும் பொறுத்துக் கொள்வது அல்லாஹ்வின் கண்காணிப்பை உணர்ந்து கொள்வது போன்றவற்றை குறிப்பிடலாம். மேலும், நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “யார் பொய்யுரைத்தலையும் பாவமான செயல்களையும்  விட்டுவிடவில்லையோ, அவர் உணவையும், பானத்தையும் தவிர்ந்திரருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை” ...

Paper Article - 01

Image
ரமழான் சிந்தனை - 01 அருள்மிகு ரமழானை வரவேற்போம் 2026/02/19 Thinakaran முஃமின்களின் இதயங்களில் ஆன்மீக வசந்தத்தை மலரச் செய்யும் புனித ரமழான் மாதம் எம்மை  வந்தடைந்திருக்கிறது. இது வெறும்  நாட்களின் மாற்றமல்ல; மாறாக வாழ்க்கையை மாற்றி அமைக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். அல்லாஹ் கூறுகிறான்: “ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு விதியாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது; நீங்கள் தக்வா  உடையவர்களாக மாறுவதற்கு” (அல்-பகரா: 183). ஆகவே, ரமழான் என்பது பசியைத் தாங்கும் மாதம் மட்டுமல்ல; தக்வாவை வளர்க்கும் ஆன்மீகப் பயிற்சி களம். நபி முஹம்மத் ﷺ அவர்கள் கூறினார்கள்: “ரமழான் மாதம் வந்தால் சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும்; நரகத்தின் கதவுகள் மூடப்படும்; ஷைத்தான்கள்   விலங்கிடப்படும்” (புகாரி, முஸ்லிம்). இதன் மூலம் இந்த மாதத்தின் மகத்துவம் எவ்வளவு உயர்ந்தது என்பதைக் காணலாம். இத்தகைய அருள் பொழியும் நாட்களை அலட்சியமாக அல்லாமல், மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்க வேண்டும். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “ரமழான் மாதம் மனிதர்களின் வழிகாட்டியா...