நூல் அறிமுகம் - 03

خطابنا الاسلامي في عصر العولمة 📖 

د. يوسف القرضاوي رحمه الله ✍️ 

அழைப்பாளர்களின் மொழியில் மாற்றம் - நூல் அறிமுகம்

இஸ்லாமிய அழைப்பாளர்கள் இஸ்லாத்தின் தூய்மையான சிந்தனை மற்றும் பண்பாட்டினை உலகுக்கு பரப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அவர்களின் அழைப்பு மொழியின் தரம் (Quality of Communication) சிறந்ததாக இருக்க வேண்டும், ஏனெனில் அதுதான் அவர்களின் செய்தியை எளிதாக புரிந்துகொள்ள உதவுகிறது. 

லாநிதி யூசுப் அல் கர்ளாவி (ரஹ்) அவர்களால் எழுதப்பட்ட மிக முக்கியமான நூல்களில் ஒன்றுதான்

خطابنا الاسلامي في عصر العولمة
பூகோளமயமாதல் யுகத்தில் நமது அழைப்பு மொழி என்ற நூலாகும்.



خطابنا الاسلامي في عصر العولمة
د. يوسف القرضاوي ✍️ 


கலாநிதி யூசுப் அல் கர்ளாவி (ரஹ்) இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இஸ்லாமிய சிந்தனையாளர், இஸ்லாமிய தஃவா களத்தில் முன்னணியில் நின்ற தன்னிகரற்ற ஓர் ஆளுமை, தான் வாழும் சமூகம் குறித்து ஆழ்ந்த அனுபவமும் கூர்ந்த பார்வையும் மிகுந்தவர். இஸ்லாமிய சட்ட துறையில் அதன் அடி ஆழம் வரை சென்று சமகால தேவைகளுக்கு ஏற்ப சட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கூறியவர், எதையும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை வழி நின்று, அதேவேளை சமகாலத்தின் செல் நெறிகளை கருத்தில் கொண்டு நோக்கியவர், உலக முஸ்லிம் சமூகம் மிக அண்மை காலத்தில் இந்த மாபெரும் இஸ்லாமிய மேதையை இழந்தது.
Dr. Yusuf Al Qarlawi 
الشيخ يوسف القرضاوي
நவீன இஸ்லாமிய அறிவுலகத்தை ஆக்கிரமித்திருந்த பிரிவினைகளையும் குறுங்குழுவாதங்களையும் கரளாவி (ரஹ்) மிகவும் பொறுப்புணர்வோடும் உறுதியோடும் எதிர்கொண்டார். அவரது எழுத்துக்கள் முஸ்லிம் உலகை எத்திசையில் வழிநடாத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டதாகவே அமைந்திருந்தன. 

கலாநிதி யூசுப் அல் கரளாவி (ரஹ்) அவர்கள் மரணிக்கும் போது இறுதிக்கட்டத்தில் இருந்த அவரது வாழ்நாள் அறிவுப்பணிகளைத் தொகுக்கும் வேலை முடிவடைந்து தற்போது 105 பாகங்களாக வெளிவந்திருக்கின்றது.

ஒரு மகத்தான அறிவுப் பொக்கிஷத்தை இஸ்லாமிய நூலகங்களுக்கான வக்ஃபுச் சொத்தாக அல்லாமா கரளாவி (ரஹ்)  அவர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தப் பணியை அவரது ஸதகா ஜாரியாவாகவும் பிரயோசனமுள்ள அறிவாகவும் அல்லாஹுத் தஆலா அன்னாரது பதிவேட்டில் சேர்ப்பித்து விட வேண்டும் என்று பிரார்த்திக்கும் இலட்சக் கணக்கானவர்களுள் நானும் ஒருவனாக இருக்கிறேன்.

1. இஸ்லாம் தொடர்பான அறிமுகம்

2. அகீதா

3. ஃபிக்ஹ் மற்றும் அதன் உஸூல்கள்

4. ஃபத்வாக்கள்

5. அல்குர்ஆன், அல்குர்ஆனியக் கலைகள் மற்றும் விளக்கவுரைகள்

6. அஸ்-ஸுன்னா மற்றும் அது சார்ந்த கலைகள்

7. ஃபிக்ஹுல் உம்மாஹ், அதன் அழைப்பு, எழுச்சி, மற்றும் அதன் இஸ்லாமிய இயக்கம்

8. வரலாறும் இஸ்லாமிய ஆளுமைகளும்

9. கவிதை, இலக்கியம் மற்றும் உரையாடல்கள்

10. இஸ்லாமியப் பணியில் இருப்பவர்களின் சிந்தனை ஒருமைப்பாட்டை நோக்கி

11. ஃகுத்பாப் பிரசங்கங்கள்

12. விரிவுரைகள்

13. எழுச்சியை நிர்வகிப்பதற்கான வழிகாட்டல்கள்

என பதின்மூன்று கருப்பொருள்களில், 105 பாகங்களாக கரளாவியின் மொத்த அறிவுப் பங்களிப்பும் வெளிவந்திருக்கின்றது.

موسوعة الامام يوسف القرضاوي
கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்களின் அரபு மொழி மூலமான நூலை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னால் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் தமிழ் வடிவமாக "அழைப்பாளர்களின் மொழியில் இஸ்லாம்" என்று தந்திருக்கிறார்கள், அதனை இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் "இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்" என்று வெளியிட்டுள்ளது.







இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்




யார் இந்த உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் ?
Usthaz Rasheedh Hajjul Akbar 
Usthaz Rasheedh Hajjul Akbar

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலுள்ள நாவலபிட்டியவில் 29.05.1960 இல் பிறந்தார் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள். நாவலபிட்டி சென். மேரிஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரம் வரை கற்றறார்.

உயர் கல்விக்காக 1976ஆம் ஆண்டு பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவில் இணைந்து கல்விப் பயணத்தை மிக சிறந்த முறையில் தொடர்ந்த அவர், பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி மாணவனாகவும் இணைந்து கொண்டார்.

1984ஆம் ஆண்டு கலைமானிப் பட்டப் படிப்பையும் (B.A) பூர்த்திசெய்து கொண்டதனையடுத்து திருமண பந்தத்தில் இணைந்தார். 04 ஆண் பிள்ளைகள், 04 பெண் பிள்ளைகளின் தந்தையான இவர், தற்போது மாவனல்லை, ஹிங்குலோயா, பகுதியில் வசித்து வருகிறார்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் மென்மையானவர். இங்கிதமானவர். ஆரவாரமின்றி பணி செய்பவர். உள்ளத்திலும் உலகத்திலும் நன்மைகளை வளரச் செய்து தீமைகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக உழைத்து வருபவர். அமைதியும் சுபிட்சமும் நிறைந்த ஒரு நல்வாழ்க்கைக்கு வழிகாட்டும் இலட்சியத்தை இலக்காகக் கொண்டவர். அதற்கேற்ப பணியாற்றி வருபவர். வன்முறைக்கு எதிரானவர். நன்முறையே எங்கள் வழி என உரத்துச் சொல்பவர்.

இந்த நூலிலே இன்றைய அழைப்பாளர்களின் அழைப்பு மொழியின் தரத்தை கலாநிதி அல்லாமா யூசுப் அல் கரளாவி (ரஹ்)  அவர்கள் சிறப்பாக படம் பிடித்து காட்டியுள்ளார்கள். இன்னும் அழைப்பு மொழியின் தரத்தை நெறிப்படுத்துவதற்கு அற்புதமான வழிமுறைகளையும் காண்பித்திருக்கிறார்கள். இவற்றை அழைப்பாளர்கள் கடைபிடிப்பதன் மூலம் அவர்களின் அழைப்பு மொழியில் மிகச் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

இஸ்லாத்தின்பால் கவர்ச்சியும் அதன் கடமைகளில் இன்பமும் அதன் அறிவுரைகளில் இனிமையும் தென்படும் போதுதான் எந்த ஒரு மனிதனுக்கும் அதில் ஈடுபாடு அதிகரிக்கின்றது. எனவே அழைப்பாளர்கள் அச்சுறுத்துதல் எனும் சாட்டையை கையில் எடுத்தவர்களாக அன்றி அன்பு எனும் கடிவாளத்தை கையில் பிடித்தவர்களாக மக்களை இஸ்லாத்தை நோக்கி........ அல்லாஹ்வை நோக்கி....... அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களது அழைப்பு மொழி அன்பும் அறிவும் செறிந்ததாக இருக்க வேண்டும் மென்மையும் பாசமும் கலந்ததாக இருக்க வேண்டும் முக்கியமான விடயங்களை கூட நாகரிகமாக முன்வைக்கும் தன்மை கொண்டதாக அது இருக்க வேண்டும்.

"கால இட மாற்றங்களுக்கு ஏற்ப சட்ட தீர்ப்புகள் மாறும்" என்ற விதியை அழைப்பாளர்கள் வாயளவில் ஏற்றுக் கொண்டாலும் நடைமுறையில் அவர்கள் கடும் போக்குடையவர்களாகவே காணப்படுகின்றனர். இந்நிலை மாறி இஸ்லாத்தின் இனிமை, சுவை இன்பம், மென்மை, இலகு தன்மை, தாராளத் தன்மை என்பவற்றை புரிந்து கொண்டவர்களாக அழைப்பார்கள் திகழ வேண்டும்.

இஸ்லாம் தெளிவானது, தூய்மையானது, மயக்கமற்றது என்பதில் அணுவளவும் ஐயமில்லை. எனினும் அதனை முன்வைப்பவர்களின் பேச்சுக்கள் தெளிவின்மைகளையும், மயக்கங்களையும் தோற்றுவிக்கின்றன. நமது அழைப்பாளர்கள் இஸ்லாத்தை பேசிக்கொண்டே இருக்கிறார்கள் வாரம் தோறும், நாள் தோறும், நொடிகள் தோறும், அவர்களது குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

"இந்த பேச்சுக்களின் இறுதியில் செவிமடுப்போருக்கு கிடைப்பது என்ன ?"

அழைப்பாளர்களின் பேச்சுக்களால் மக்களின் உள்ளங்களில் இஸ்லாம் பற்றிய தெளிவு ஏற்பட்டிருக்கின்றதா ? அல்லது புகைமூட்டம் போல் மயக்கம் தெளியாத ஒரு நிலை தொடர்கின்றதா ?

இஸ்லாம் பிழையாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு காலப்பகுதியில் இஸ்லாமிய அழைப்பாளர்கள் இஸ்லாத்திற்கு செய்யும் அரும் பணிகளில் ஒன்று இஸ்லாத்தின் மகோன்னதத்தை பாதுகாப்பதாகும்.

அழைப்பாளர்களின் மொழி எளிமை, தரம், கருத்துக்கள் என்பவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மேலும் இஸ்லாத்தின் கண்ணியம் மதிப்பு உயர்வுகளுக்கு அவப் பெயரை ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டும்.

அழைப்பாளர்களின் அழைப்பு மொழியில் மாற்றம் வர வேண்டும் அந்த மாற்றத்தின் மூலம் இஸ்லாமிய அழைப்பு பணி வீறு கொண்டு எழ வேண்டும் என்பதையே கலாநிதி யூசுப் அல் கர்ளாவி (ரஹ்) இந்த புத்தகத்தின் மூலம் எடுத்துரைக்க  முனைகின்றார். 

இஸ்லாமிய அழைப்பாளர்களின் அழைப்பு மொழி மிக உயர்ந்ததுடன், உண்மையையும், கருணையையும் பிரதிபலிக்க வேண்டும். இந்த நூல், அழைப்பாளர்களின் நேர்த்தியான மொழி நடையை உருவாக்கும் வழிகாட்டுதல்களை வழங்குவதால், ஒவ்வொரு அழைப்பாளரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய முக்கிய நூலாகும்.

✍️  azeef ameer

Azeef Ameer 👇 
Facebook: Azeef Ameer
Instagram: Azeef Ameer
YouTube: Azeef Ameer
Telegram: Azeef Ameer
WhatsApp: Azeef Ameer
Gmail: ameeraazeef2001@gmail.com

Comments

Popular posts from this blog

நூல் அறிமுகம் - 05

ஆளுமை அறிமுகம் - 02