நூல் அறிமுகம் - 04

 📖 இசை ஹலாலா? ஹராமா?

✍️ எழுத்தாளர்: முஹம்மது இமாறா

✍️ மொழிபெயர்ப்பாளர்: தாரிக் அலி (நளீமி)

📚 வெளியீடு: சீர்மை பதிப்பகம் 

பாடலும் இசையும்

மொழி, குர்ஆன், நபிவழி ஆகியவற்றின் ஒளியில்

பாடல் என்பது பேச்சு (குரல்), சந்தம், இசை என்பவற்றின் கூட்டிணைவாகும். இஸ்லாமியச் சட்டப் பாரம்பரியத்தில் நபிவழியிலும் (சுன்னா), சட்ட விளக்கத்திலும் (ஃபிக்ஹு), சிந்தனைப் பரப்பிலும் 'பாடல்' பற்றி பல சொற்பிரயோகங்களை அடிப்படையாகக் கொண்டு விவாதங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 'லஹ்வு' (கேளிக்கை) 'சமாஉ' (பாடல் கேட்டல்) ஆகிய சொற்பிரயோகங்கள் மிக முக்கியமானவை.

பாடலைக் குறிக்க 'லஹ்வு' என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருப்பதால், நவீனகால மனிதர்களிடம் அதுகுறித்த எதிர்மறையான கருத்தை. அதாவது பாடல் என்பது வெறுக்கத்தக்கது (மக்ரூஹ்), அல்லது தடைசெய்யப்பட்டது (ஹறாம்) என்னும் மனப்பதிவையே அது ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையில் இஸ்லாத்தின் ஆதாரப்பூர்வமான, சரியான கருத்து அதுவல்ல. எனவே, 'லஹ்வு' என்ற பிரயோகத்தின் சரியான கருத்து என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, பாடல் குறித்தான நபிமொழிகள் 'லஹ்வு' என்னும் தலைப்பிலேயே ஹதீஸ் கிரந்தங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. குர்ஆனிலும் இந்த 'லஹ்வு' என்ற பதம் கையாளப்பட்டுள்ளது எனில், உண்மையில் அதன் கருத்துதான் என்ன?

இசை பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன? 

திருக்குர்ஆனும் சுன்னாவும் அதுபற்றிச் சொல்வதென்ன? 

இஸ்லாமியச் சட்டவியல் அறிஞர்கள் மத்தியில் இவ்விசயத்தில் கருத்து வேறுபாடு நிலவுவது ஏன்? 

மத்ஹபுகள் என்ன கூறுகின்றன? 

கலை பற்றிய பொதுவான இஸ்லாமிய நிலைப்பாடு என்ன?

இவை அனைத்தைப் பற்றியும் சுருக்கமாக, ஆனால் கூர்மையாக விளக்கும் நூல் இது. சர்ச்சைக்குரிய இவ்விவகாரத்தில் மூலாதாரங்களின் அடிப்படையில் சரியான நிலைப்பாட்டுக்கு வருவதற்கு இன்றியமையாத நூல்.

✍️  azeef ameer

Azeef Ameer 👇 
Facebook: Azeef Ameer
Instagram: Azeef Ameer
YouTube: Azeef Ameer
Telegram: Azeef Ameer
WhatsApp: Azeef Ameer
Gmail: ameeraazeef2001@gmail.com

Comments

Popular posts from this blog

நூல் அறிமுகம் - 05

ஆளுமை அறிமுகம் - 02